spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

ரஜினிக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டைல் என்றாலே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். ரஜினிக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக மின்னுகிறார். நடிப்பு, நடை, கண்ணாடியை சுழற்றும் ஸ்டைல், சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் என அனைத்திலும் மாஸ் காட்டி விடுவார். அந்த வகையில் இவருடைய பெயரை சொன்னாலே ஒரு பவர் தான். மேலும் எவ்வளவுதான் புகழின் உச்சிக்கு சென்றாலும் தன்னுடைய எளிமையை என்றுமே இழக்காமல் இருப்பவர் ரஜினி. 74 வயதிலும் சினிமாவிற்காக நொடிமுள்ளாய் ஓடிக்கொண்டிருக்கும் இவர், இன்றைய தலைமுறையினருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்குகிறார். தற்போது இவர், தனது 172வது படமான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். ரஜினிக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!இந்நிலையில் தான் வருகின்ற நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி கோவாவில் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். அதே சமயம் இந்த விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரஜினியையும் கௌரவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் ரஜினிக்கு மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ