கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குனர் சங்கரால் சிக்கல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், முதல்வன், அந்நியன் போன்ற பல வெற்றி படங்களை தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இருப்பினும் கடந்தாண்டு ஜூலை மாதம் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதே சமயம் இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் இயக்குனர் சங்கரால் இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இயக்குனர் சங்கர், இந்தியன் 3 படத்தை முடித்து தராமல் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடக் கூடாது என புகார் அளித்ததின் பேரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேம் சேஞ்சர் படத்திற்கு தடை போட இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.
ஆனால் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ஷங்கருக்கும் லைக்காவிற்கும் இடையிலான பிரச்சனையில் கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கல் ஏற்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும் அப்படி சிக்கல் ஏற்பட்டால் எந்த ஒரு தமிழ் படத்தையும் ஆந்திராவில் வெளியிட முடியாது என்பது போல் திட்டமிட்டு வருகிறாராம். கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.