தனுஷின் இட்லி கடை படத்திற்கு சிக்கல் வந்துள்ளது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று (அக்டோபர் 1) ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமும், உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில், இன்று வெளியான இப்படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது இப்படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இது தவிர தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை இருக்கிறது. இருந்தபோதிலும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காட்சிகள், எந்த ஒரு திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் ஆகவில்லை எனவும் குறைந்தபட்ச அளவு டிக்கெட்டுகள் கூட விற்கப்படவில்லை எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களிலாவது ரசிகர்களின் வரவேற்பு அதிகரிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.