Homeசெய்திகள்சினிமா'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

-

- Advertisement -

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது!

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க உள்ள லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகுள்ள இப்படத்தின் திரைக்கதைப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதும் நிறைவடைந்து இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

3, வை ராஜா வை ஆகிய படங்களுக்கு பிறகாக இயக்க உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

முதற்கட்டமாக விஷ்ணு விஷால், விக்ராந்த் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகாக லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைவார் கூறப்படுகிறது.

MUST READ