Homeசெய்திகள்சினிமாசிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்... ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்...

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

-

- Advertisement -
ரத்னம் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு, அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஷால் இணைந்துள்ளார். இதற்கு முன்பாக ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்திருந்தனர். ரத்னம் திரைப்படம் விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்து உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். விஷால் படத்திற்கு பிரசாத் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். சில வாரங்களுக்கு முன்பாக, ரத்னம் படத்தின் பாடல்கள் வெளியானது. பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், படத்தில் 5 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியை எந்தவித கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்துள்ளனர். திருப்பதியில் உள்ள தேசிய நெடுஞ்சாயைலில் மூன்று நாட்கள் சேர்ந்து இந்த காட்சியை எடுத்திருக்கின்றனர். இந்த மேக்கிங் காணொலி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ