spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோவின் பெயர் இல்லாத 'வாரணாசி' பட டைட்டில் கார்டு........ ராஜமௌலி செய்தது சரியா?

ஹீரோவின் பெயர் இல்லாத ‘வாரணாசி’ பட டைட்டில் கார்டு…….. ராஜமௌலி செய்தது சரியா?

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ராஜமௌலி. இவர் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.ஹீரோவின் பெயர் இல்லாத 'வாரணாசி' பட டைட்டில் கார்டு........ ராஜமௌலி செய்தது சரியா? தற்போது இவரது இயக்கத்தில் ‘வாரணாசி’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாக ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது கிட்டத்தட்ட ரூ.1200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஹீரோவின் பெயர் இல்லாத 'வாரணாசி' பட டைட்டில் கார்டு........ ராஜமௌலி செய்தது சரியா?அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் தொடங்கி ஒடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்த படத்தின் டைட்டிலும், மகேஷ் பாபுவின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்ட நிலையில் இணையத்திலும் வைரலாகி வந்தது. ஆனால் இந்த படம் தொடர்பான டைட்டில் கார்டில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். ராஜமௌலி ஏன் இப்படி செய்தார்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஹீரோவின் பெயர் இல்லாத 'வாரணாசி' பட டைட்டில் கார்டு........ ராஜமௌலி செய்தது சரியா?

பொதுவாக ராஜமௌலி தன்னுடைய படங்களில் வரும் கேரக்டர்கள் மட்டும்தான் ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்றும், நடிகர் – நடிகைகளின் பெயர்கள் நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நினைப்பார். அதுதான் அவருடைய ஸ்டைலும் கூட. அதனால்தான் போஸ்டரில் யாருடைய பெயரும் இடம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ராஜமௌலியின் படங்களிலிருந்து வெளியாகும் போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் போன்றவை பெரிய அளவில் ஹைப் ஏற்றவில்லை என்றாலும், படம் தாறுமாறாக இருக்கும். அதுபோல தான் வாரணாசி படமும் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ