spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

-

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர் 18” (Under 18) டைட்டில் லுக்கினை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.“அண்டர் 18”  திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…மெட்ராஸ்காரன் படத்தினை தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனிடம்  அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது. இதனை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.

we-r-hiring

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர். இதற்கு சாம் சி.எஸ்.இசையமைக்கிறார்.

“Under 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

MUST READ