Homeசெய்திகள்சினிமாஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள ரிலீஸுக்கு பிளான் பண்ணும் 'வாடிவாசல்' படக்குழு!

ஆரம்பிக்கவே இல்ல… அதுக்குள்ள ரிலீஸுக்கு பிளான் பண்ணும் ‘வாடிவாசல்’ படக்குழு!

-

- Advertisement -

வாடிவாசல் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள ரிலீஸுக்கு பிளான் பண்ணும் 'வாடிவாசல்' படக்குழு!

சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ரெட்ரோ, ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45, வெங்கி அட்லூரி இயக்க உள்ள சூர்யா 46 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன் – சூர்யா காம்போவில் உருவாக உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள ரிலீஸுக்கு பிளான் பண்ணும் 'வாடிவாசல்' படக்குழு!ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்த படத்தை 2026 மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஜி.வி. பிரகாஷ், வாடிவாசல் படத்தின் முதல் பாடல் ரெக்கார்டிங் பணிகளையும் முடித்துவிட்டார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ