spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசெல்ஃபி எடுப்பது போன்று பிரபல நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்!

செல்ஃபி எடுப்பது போன்று பிரபல நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்!

-

- Advertisement -

பிரபல நடிகை ஒருவரிடம் செல்ஃபி எடுப்பது போன்று இளைஞர் ஒருவர் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.செல்ஃபி எடுப்பது போன்று பிரபல நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. மாடலிங்கில் பிரபலமான இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நாஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பேசி சர்ச்சைகளில் சிக்கினார். செல்ஃபி எடுப்பது போன்று பிரபல நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்!அதே சமயம் தான் இறந்து விட்டதாகவும் நாடகமாடி பரபரப்பை கிளப்பினார். இவ்வாறு அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் பூனம் பாண்டேவிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஒரு இளைஞர். அதாவது பூனம் பாண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

we-r-hiring

எனவே அந்த ரசிகரிடம் செல்பி எடுப்பதற்கு போஸ் கொடுக்கும் போது அந்த ரசிகர் நடிகை பூனம் பாண்டேவிற்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். எனவே இளைஞரின் இச்செயலாளர் அதிர்ச்சி அடைந்தது மட்டுமில்லாமல் உஷாரான பூனம் பாண்டே அந்த இளைஞரை தள்ளிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ