Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

-

ஜெயிலர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகள் உடனும் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மோகன்லால் தமன்னா சிவராஜ்குமார் ஜாக்கி ஷரப் யோகி பாபு வசந்த் ரவி உள்ளிட்டவர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் மூன்று பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் இப்படம் தயாராகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

போலா சங்கர்

கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் போலா சங்கர்.

இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஜோடியாக தமன்னாவும் நடித்துள்ளனர். ஏகே என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாகர் மகதி இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மாஸ் என்டேர்டைன்மென்ட் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் அதை தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

OMG 2

அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓ எம் ஜி திரைப்படம் வெளியானது. ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து யாமி, பங்கஜ் திரிப்பாதி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொழில்

சரத்குமார் அசோக்செல்வன் கூட்டணியில் போர் தொழில் திரைப்படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ராட்சசன் படத்திற்கு பிறகு ஒரு சிறந்த கிரைம் திரில்லர் படமாக இப்படம் பேசப்படுகிறது. அப்பிளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜேக்ஸ் பிஜாய் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள்ட்டையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ