Homeசெய்திகள்சினிமாகேரள திரையரங்குகளில் படங்கள் வெளியிட மறுப்பு

கேரள திரையரங்குகளில் படங்கள் வெளியிட மறுப்பு

-

கேரளாவில் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் வெளியாகும் மலையாள மொழி படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதில், கேரள தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. திரைப்படம் திரையரங்கிற்கு வந்த 42 நாட்கள் கழித்து தான், ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்பது தான் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள நிபந்தனை ஆகும். இதை தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இந்த நிபந்தனை மீறி சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

நிபந்தனையை மீறி செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் மீது சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், அண்மையில் மோகன்லால் நடிப்பில் உருவான திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படத்தை ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கி இருக்கிறார். இதில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் வௌியாகி வரவேற்பை பெற்றது. மேலும், வரும் 23-ம் தேதி படம் ஓடிடி தளத்திற்கு வரும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

இத்திரைப்படமும் நிபந்தனையை மீறி முன்கூட்டியே ஓடிடியில் வெளியிட உள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வரும் 22-ம் தேதி முதல் புதிய மலையாளத் திரைப்படங்கள் எதுவும் கேரளாவில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படாது என அறிவித்துள்ளனர்.

MUST READ