Homeசெய்திகள்சினிமாதன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்... புதிய பாடல் ரிலீஸ்...

தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்… புதிய பாடல் ரிலீஸ்…

-

சாய் தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திருடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. முதல் படம் அவருக்கு அவ்வளவு பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை. இதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் நாயகியாக அவர் நடித்திருந்தார். 5 நாயகிகளில் ஒருவராக தன்ஷிகா நடித்திருப்பார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தன்ஷிகா.

தன்ஷிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் தி ப்ரூஃப். இத்திரைப்படத்தை ராதிகா இயக்கி இருக்கிறார். ‘கோல்டன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அசோக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

MUST READ