நடிகர் அஜித் நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அஜித் தரப்பில் சாதாரண பரிசோதனைக்காகவே மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. அதன் பின்னர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவமனை நிர்வாகமும் அஜித்துக்கு மூளைக்கும் காதுக்கும் இடையிலான ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதேசமயம் நடிகர் அஜித்துக்கு உண்டான மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் அஜித்தை இரண்டு விஷயங்கள் பாதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதாவது மிலன் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தான் அஜித் மிலனிடம் பேசி இருந்தாராம். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லையாம். பின்னர் மிலனின் உதவியாளர், அஜித்தை தொடர்பு கொண்டு மிலன் இறந்த செய்தியை கூறியுள்ளார். சற்று முன்பு தன்னிடம் பேசி இருந்த மிலனின் மறைவு அஜித்தை மிகவும் பாதித்துள்ளது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் அஜித்தின் மிக நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவும் அஜித்தை பாதித்துள்ளது. இதன் காரணமாகவே அஜித்துக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அஜித் நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.