spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதில்லானா மோகனாம்பாள் பட இசைக் கலைஞர் மரணம்!

தில்லானா மோகனாம்பாள் பட இசைக் கலைஞர் மரணம்!

-

- Advertisement -

பிரபல இசைக்கலைஞர் எம்.பி.என் பொன்னுசாமி காலமானார். தில்லானா மோகனாம்பாள் பட இசைக் கலைஞர் மரணம்!90 வயது நிரம்பிய இவர் மதுரையைச் சேர்ந்தவர். தனது சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் உடையவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது சகோதரன் எம்.பி.என் சேதுராமனுடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசை நிகழ்ச்சியை செய்தவர். இவர் கடந்த 1968 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் எனும் திரைப்படத்தில் இசைக் கலைஞராக பணியாற்றியவர்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜியுடன் இணைந்து பத்மினி, நம்பியார், டி எஸ் பாலையா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.தில்லானா மோகனாம்பாள் பட இசைக் கலைஞர் மரணம்!

நாதஸ்வர இசையில் திறமை பெற்ற எம்.பி.என் பொன்னுசாமி தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு பின் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இவர் நாதஸ்வரம் இசைக்கும் பணி செய்து வந்தார். பரம்பரை பரம்பரையாக இவரின் குடும்பத்தினர் நாதஸ்வரம் வாசித்து வருகின்றனர். அந்த வகையில் எம். பி.என் பொன்னுசாமி, தமிழக அரசின் கலைமாமணி விருது, சங்கீத சூடாமணி விருது, இசை பேரறிஞர் விருது போன்ற விருதுகள் இவரால் பெருமை அடைந்தன.

MUST READ