தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். இதற்கிடையில் இவர் ஜனநாயகன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜனநாயகன் திரைப்படமானது, தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த்கேசரி படத்தின் ரீமேக் என்றும், அதன்படி பாலகிருஷ்ணா கேரக்டரில் விஜய் நடிக்க, ஸ்ரீலீலா கேரக்டரில் மமிதா பைஜூ நடிக்கிறார் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தான், பகவந்த்கேசரி படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பகவந்த்கேசரியில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக கேவிஎன் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் அப்படக்குழுவிடம் இருந்து ரூ. 4.5 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஜனநாயகன் திரைப்படம் ரீமேக் படம் என்று சிலரும், அது ரீமேக் இல்லை ஒரிஜினல் படம் என்று சிலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -