இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு முக்கியமான இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் வெற்றிமாறன், சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போனது. இருப்பினும் இந்த ஆண்டில் அதாவது இன்னும் சில மாதங்களில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர்- ஐ இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், “வாடிவாசல் படத்திற்கு பிறகு தனுஷுடன் தான் என்னுடைய அடுத்த படம். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன், D55, D56 என ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியிலான புதிய படம் அடுத்த ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.