ட்ரெயின் படத்தின் கதை குறித்து இயக்குனர் மிஸ்கின் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மிஸ்கின் தற்போது பிசாசு 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டிம்பிள் ஹயோதி, வினய் ராய், சம்பத்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இயக்குனர் மிஸ்கின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பௌசியா பாத்திமா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். டார்க் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட மிஸ்கின், ட்ரெயின் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “வாழ்க்கையை வெறுத்த கதாநாயகன் ஒருவன் கடைசியாக தன் மனைவியின் கல்லறைக்கு சென்று ஒரு சின்ன செடியை வைத்துவிட்டு அதன் பிறகு இறந்துவிடலாம் என்ற முடிவில் டிரெயின் ஒன்றில் ஏறுகிறான்.
VijaySethupathi’s #Train Full Plot & climax revelved by Mysskin !!
Looks like a feel good Film is coming out from the combo based on Train journey ♥️✨pic.twitter.com/qEHpC7kOQy
— AmuthaBharathi (@CinemaWithAB) May 12, 2025

அந்த ட்ரெயினில் நடக்கும் சம்பவங்களில் அவன் தன்னை மறந்து ஈடுபடுகிறான். அப்போது அவன் சந்திக்கும் மனிதர்களும், அந்த பயணமும், அந்த அனுபவமும் அவனுக்கு வாழ்க்கையை கற்றுத் தருகிறது. கிளைமாக்ஸில் அவன் இந்த ட்ரெயினில் ஏறவில்லை என்றால் என் வாழ்க்கை மோசமாகி இருக்கும். இது எனக்கு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளது என்று சொல்கிறான்” என்று தெரிவித்துள்ளார்.