கடந்த சில தினங்களுக்கு முன்பாக நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனைதான் பல ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வந்தது. இதன்படி தனுஷ் – நயன்தாரா விவகாரம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கடந்த நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஆவணப்படத்தில் தங்களின் காதலுக்கு அடித்தளமாக இருந்த நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகளை இணைக்க வேண்டும் என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் விரும்பினர். இது தொடர்பாக நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி கேட்டபோது நடிகர் தனுஷ் அதற்கு அனுமதி தரவில்லை என ஆவணப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா மிக நீளமான மூன்று பக்க அறிக்கையினை வெளியிட்டு தனுஷ் மீது குற்றம் சாட்டியிருந்தார். நயன்தாராவின் இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் நயன்தாராவிற்கு ஆதரவாக தனுஷ் உடன் இணைந்து நடித்த நடிகைகள் பலரும் குரல் கொடுத்திருந்தனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து நானும் ரெளடி தான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படமும் வெளியானது. எனவே தனது முறையான அனுமதி இல்லாமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ், நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“#Nayanthara is a self made Lady Superstar. Usually she won’t give interviews, but she have written a 3-Page letter. So I felt that I have to support her & felt what she is saying is true”
– Actress Parvathypic.twitter.com/m6oGTxcg1u— AmuthaBharathi (@CinemaWithAB) November 28, 2024
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை பார்வதியிடம் நயன்தாராவிற்கு ஆதரவு குரல் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பார்வதி, “நயன்தாரா தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர். வழக்கமாக அவர் பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால் மூன்று பக்கத்திற்கு கடிதம் எழுதி இருந்ததனால் நான் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் அவர் சொல்வது உண்மை என்று உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.