ராக்கி,சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் தனுஷ்,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி கேப்டன் மில்லர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்சார் போர்டு இந்த படத்தில் நான்கு நிமிட காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளாம். அருண் மாதேஷ்வரன் இதற்கு முன் இயக்கிய படங்களில் ரத்தம் தெறிக்கும்படி வன்முறை காட்சிகள் சற்று அதிகமாகவே இருந்தது. கேப்டன் மில்லர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் அதுபோன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதனால் படத்திற்கு A சர்டிபிகேட் தான் வழங்க முடியும் என்று சென்சார் போர்டு கூறியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் U/A சான்றிதழ் கேட்டு முறையிட்டுள்ளனர்.
இதுவரை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த எந்த படமும் A சான்றிதலுடன் வெளியாகவில்லை என்பதாலும், A சர்டிபிகேட் கிடைத்தால் குடும்பத்துடன் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வரும் கூட்டம் குறைந்து விடும் என்பதாலும் U/A கேட்டுள்ளனர். எனவே படத்தில் அந்த 4 நிமிட காட்சிகள் வெட்டி எடுக்கப்பட உள்ளன. ஆடியோ வெளியீட்டு மேடையில் நடிகர் தனுஷ் “படத்தின் இறுதி முப்பது நிமிட காட்சிகளை மிஸ் பண்ணிடாதீங்க… வேற லெவலில் இருக்கும்” என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் சில காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதால் படக்குழுவினர் நினைத்த மாதிரியே இந்த காட்சியை நாம் திரையில் பார்க்க முடியாதே என்று ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
- Advertisement -