தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி இக்கூட்டணியில் தற்போது தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ.ஆர். ரகுமானின் இசையிலும் இப்படம் உருவாகியிருக்கிறது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அபிராமி, த்ரிஷா, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படமானது அடுத்த மாதம் 5ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தது இன்று (மே 17) மாலை 5 மணி அளவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது.
ரசிகர்கள் பலரும் அதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் ப்ரோமோஷன் பணிகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு, ஏ.ஆர். ரகுமான், அபிராமி, த்ரிஷா ஆகியோர் தக் லைஃப் பட ப்ரோமோஷன் பணியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.