தக் லைஃப் படத்திலிருந்து சுகர் பேபி பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து வெளியான ஜிங்குஜா எனும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து சுகர் பேபி எனும் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுதா, சரத் சந்தோஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். சிவா ஆனந்த், ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.