Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்.... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

‘தக் லைஃப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.'தக் லைஃப்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்.... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன், கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் தனது 234 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற ஜூன் 5ஆம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 'தக் லைஃப்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்.... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 17ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் மே 24 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ