விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Just 6 hours to go for #Spark to light up your screens 💥
Releasing Today 6 PM 🔥
Vocal by @thisisysr | @Singer_vrusha 🎤@actorvijay Sir
A @thisisysr Magical 🎼
A @gangaiamaren | @ramjowrites lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram… pic.twitter.com/5P93CgYaxc— Archana Kalpathi (@archanakalpathi) August 3, 2024
யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு அதாவது விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைந்ததும் தொடங்க இருக்கிறது.
05:32 Pm
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2024
இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து இன்றுடன் 32 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 5.32 மணி அளவில் வெளியாகும் என்று அப்டேட் கிடைத்துள்ளது.
டிமான்ட்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
Get ready for the spine chilling track!
Third single from #DemonteColony2 #WhyAreWeWandering is coming to get you Today, at 5:01pm.
A @samcsmusic musical.#DarknessWillRule #DC2FromAug15 @BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @AjayGnanamuthu @bbobby @ManojBeno
— Demonte Colony 2 (@DemonteColony2) August 3, 2024
அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15 திரையிடப்பட இருக்கிறது. மேலும் ஏற்கனவே இதன் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் அடுத்ததாக WHY ARE WE WANDERING எனும் மூன்றாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 5.01 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.