டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சசிகுமார் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து மிதுன், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அபிஷன். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் இன்றுடன் (மே 15) மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது அந்த காட்சியில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெற்ற கொண்டாடும் மனசு விளையாடும் வயசு ரீ-கிரியேட் செய்திருந்தனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.