spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர்... பூஜை புகைப்படங்கள் வைரல்!

சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்… பூஜை புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர்... பூஜை புகைப்படங்கள் வைரல்!

கடந்த மே மாதம் 1ஆம் தேதி சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன், கமலேஷ், யோகலட்சுமி, ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி, படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். இவருடைய கேரக்டர் இந்த படத்திற்கு பலம் சேர்த்தது. அதேசமயம் எதார்த்தமான திரைக்கதையை கொடுத்து ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார் அபிஷன். சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர்... பூஜை புகைப்படங்கள் வைரல்!இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இதில் நடிகை அனஸ்வராராஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மகேஷ்ராஜ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர்... பூஜை புகைப்படங்கள் வைரல்!இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (ஆகஸ்ட் 28) சிறப்பாக நடந்துள்ளது. இந்த பூஜையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சௌந்தர்யா ரஜினிகாந்துடன் கைகார்த்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர்... பூஜை புகைப்படங்கள் வைரல்!மேலும் இந்த படத்தை இயக்குனர் மதன் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ