‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனர் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை தாண்டி எப்படி தங்களின் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. எதார்த்தமான திரைக்கதையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் இப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த படத்தினை மகேஷ் ராஜ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.