Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?

கடந்த மே 1ஆம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து மிதுன், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், யோகலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்த தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதுதான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதை. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது தவிர ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஜூன் மாதம் 6ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ