டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், மிதுன், கமலேஷ், யோகலட்சுமி ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கி, படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை மையமாக எமோஷனல் – நகைச்சுவை கலந்த ஒரு எதார்த்தமான கதையை கொடுத்திருந்தார் அபிஷன். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஜூன் 2ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.