Homeசெய்திகள்சினிமாடொவினோ நடித்துள்ள நடிகர்... முதல் பாடல் ரிலீஸ்...

டொவினோ நடித்துள்ள நடிகர்… முதல் பாடல் ரிலீஸ்…

-

- Advertisement -
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் நடிகர் படத்திலிருநந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018- என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

 

உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்படட் இத்திரைப்படம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டொவினோ தாமஸின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஐடன்டிடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து, டொவினோ நடித்திருக்கும் புதிய திரைப்படம் நடிகர். டிரைவிங் லைசென்ஸ் என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் லால் ஜெ இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் டொவினோ, டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இந்நிலையில், டொவினோ தாமஸ் நடித்திருக்கும் நடிகர் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் மே மாதம் 3-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ