Homeசெய்திகள்சினிமாஇளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை.... உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!

இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!

-

- Advertisement -

இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை.... உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன், 2022இல் வெளியான லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். அதற்கு முன்னதாக தனது வியாபாரம் சம்பந்தமான விளம்பரத்தில் நடிக்க தொடங்கினார். அப்போதிலிருந்தே சமூக வலைதளங்களில் பலரும் இவரை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி உருவ கேலி செய்து வந்தனர். இருந்த போதிலும் எதையும் பொருட்படுத்தாமல் லெஜெண்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை போன்றவை சிறப்பாக அமைந்திருந்தாலும் பலவீனமான கதை படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை.

அதைத் தொடர்ந்து லெஜெண்ட் சரவணன், எதிர்நீச்சல் காக்கிச்சட்டை கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இப்படம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதே சமயம் சில நாட்களுக்கு முன்பாக லெஜெண்ட் சரவணன் தாடி மீசையுடன் ஸ்டைலான லுக்கில் இளமையாக தோற்றமளித்தார். இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை.... உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!புதிய படத்திற்காக தான் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது லெஜெண்ட் சரவணன் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது உருவ கேலி எதிர்மறையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் இளமையாக தோற்றமளிக்க சிகிச்சை பெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ