- Advertisement -
கோலிவுட்டில் 21 ஆண்டுகளாக முன்னனி நடிகையாவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, திரைப்படங்களில் நடித்து 20-களில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாக அமைந்த திரைப்படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு கோலிவுட் திரையுலகில் மீண்டும் ஒரு சிவப்பு கம்பளத்தை விரித்துக்கொடுத்தது.

அழகும் அறிவும் ஒருசேர நிரம்பிய பெண்ணாக கோலிவுட் ரசிகர்களின் குந்தவையாகவே மாறிப்போனார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா, அடுத்தடுத்து தி ரோடு, லியோ, விடாமுயற்சி படங்களின் மூலம் கோலிவுட்டில் விட்ட கொடியை பிடித்தார். தற்போது மலையாளத்திலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.


