- Advertisement -
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை தந்து முன்னணி இயக்குநராக உருவெடுத்தவர் சந்தீப் ரெட்டி வங்கா. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் தேவரகொண்டாவையும் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் கபீர் சிங் என்ற படத்தை இயக்கினார். இது அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.

அண்மையில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இதில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். பான் இந்தியா ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனில் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் தந்தை – மகனாக நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.




