நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஆரம்பத்தில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். அதன் பின் சில காலங்கள் திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன் பின் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றார் திரிஷா. மீண்டும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா பிரம்மாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்படும் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் ராஜமௌலி பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதைகைய பெருமையை உடைய ராஜமௌலி இயக்கத்தில் திரிஷா நடிக்க மறுத்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை அது மரியாதை ராமண்ணா படம் தான். இந்த படத்தில் காமெடி நடிகர் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க ராஜமௌலி திரிஷாவை அணுகினாராம். ஆனால் திரிஷா காமெடி நடிகருக்கெல்லாம் ஜோடியாக நடிக்க முடியாது என்று அந்த பட வாய்ப்பு மறுத்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் மரியாதை ராமண்ணா திரைப்படம் தான் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.