Homeசெய்திகள்சினிமாதிரிஷாவின் 'தி ரோட்' படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!

திரிஷாவின் ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

திரிஷா நடித்துள்ள தி ரோட் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
திரிஷா,இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளிலும் நடித்து வருகிறார். அதேசமயம் இவருக்கு பட வாய்ப்புககளும்
தற்போது குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இவர் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் நடிக்கிறார் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதன் பிறகு அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் த்ரிஷா, பிருந்தா என்ற வெப் சீரிஸ் மற்றும் சதுரங்க வேட்டை 2 படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் இவர் தூங்கா நகரம் படத்தை இயக்கிய கௌரவ நாராயணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இவ்வாறாக பிசியாக நடித்து வரும் திரிஷாவின் ‘தி ரோட்’ படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை AAA சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் அருள் வசீகரன் இயக்கியுள்ளார். இதற்கு ஷாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இதில் திரிஷாவுடன் இணைந்து மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் எம் எஸ் பாஸ்கர் விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் படப்பிடிப்புகளும் நிறைவடைந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இந்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ