ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய டிவி பிரபலங்கள். திருமண பந்தத்தில் இணைந்த புது ஜோடி. வைரலாகும் புகைப்படம் இதோ!!!
பிரபல டிவிகளில் பல சீரியல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது தொடரில் ஜோடியாக இணைந்து நடித்தால் உடனே திருமணம் செய்து கொள்வது தொடர்ந்து வருகின்றது.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு குழந்தையும் பிறந்தது.
ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்தனர். பின்னர், பல எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிற்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
ஏனென்றால் ஒரு தொடரில் நடித்தவரை உடனே காதலித்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கின்றது. ஆனாலும் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வருகிறார்கள்.
இந்த வரிசையில் பிரபல தொலைகாட்சியில் ஒலிபரப்பான திருமணம் சீரியலில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் சீரியல் முழுவதும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், சீரியலில் ஒன்றாக நடித்த பல நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். தொடர்ச்சியாக இப்போது ரீல் ஜோடியாக நடித்த விஜய் டிவி பிரபலம் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.
மேலும், இதுபோன்று சீரியல் நட்சத்திரங்களின் திருமணத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.