Homeசெய்திகள்சினிமாகவினுக்கு ஜோடியாக நடிக்கும் இரண்டு கதாநாயகிகள்!

கவினுக்கு ஜோடியாக நடிக்கும் இரண்டு கதாநாயகிகள்!

-

கவினுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவின் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கே எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் ஸ்டார் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி பொகங்கர் ஆகியோர் கவினுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ