Homeசெய்திகள்சினிமா'கார்த்தி 27' படத்தில் இரண்டு கதாநாயகிகளா?

‘கார்த்தி 27’ படத்தில் இரண்டு கதாநாயகிகளா?

-

'கார்த்தி 27' படத்தில் இரண்டு கதாநாயகிகளா?நடிகர் கார்த்தி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தி தனது 26 ஆவது படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.'கார்த்தி 27' படத்தில் இரண்டு கதாநாயகிகளா? அதேசமயம் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்தி 27 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் கசிந்தது. 'கார்த்தி 27' படத்தில் இரண்டு கதாநாயகிகளா?அதே சமயம் ஈரமான ரோஜாவே 2 எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த சுவாதி கொண்டே இப்படத்தில் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் புதிய வரவாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ஈட்டி, மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ