Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்... நன்றி தெரிவித்த தனுஷ்!

‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்… நன்றி தெரிவித்த தனுஷ்!

-

'கேப்டன் மில்லர்' படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்... நன்றி தெரிவித்த தனுஷ்!தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருள் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியிருந்தார் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். பீரியாடிக் படமாக உருவாகி இருந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

படம் முழுவதையும் தனுஷ் தனது அசுரன் நடிப்பினால் தாங்கி பிடித்துள்ளார். இதுவரை காதல் படங்களில் மட்டுமே நடித்திருந்த பிரியங்கா மோகன் இப்படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டப்பட்டுள்ளார். தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார் மிரட்டியுள்ளார். மேலும் ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டு வரும் தங்களின் நடிப்பை நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை மையமாக வைத்து சமூகநீதி பேசும் படமாக அமைந்துள்ளது. வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் குறித்து உதயநிதி ஸ்டாலின், கேப்டன் மில்லர் படத்தை அருமையான படைப்பு என்றும் சரியான நேரத்தில் கொண்டு வந்துள்ள பட குழுவுக்கு பாராட்டுக்கள் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் தனுஷ், “நன்றி அருமை சகோதரரே, நீங்கள் விரும்புகின்ற கலையை பாராட்ட தவறியதே இல்லை. கர்ணன் படத்திற்காக நீங்கள் பாராட்டியது என் நினைவில் இருக்கிறது. இந்தப் பாராட்டும், எனக்கும் எனது கேப்டன் மில்லர் பட குழுவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ