spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாராட்டு மழையில் மாரி செல்வராஜின் 'வாழை'..... வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!

பாராட்டு மழையில் மாரி செல்வராஜின் ‘வாழை’….. வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!

-

- Advertisement -

வாழை திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.பாராட்டு மழையில் மாரி செல்வராஜின் 'வாழை'..... வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய காலத்தால் அழியாத படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் நான்காவது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் வாழை. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

we-r-hiring

இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாரதிராஜா, மணிரத்னம், சீமான் போன்றோரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதேசமயம் நான்கு நாட்களில் இந்த படம் கிட்டத்தட்ட 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ