Homeசெய்திகள்சினிமாவடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார்!

வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார்!

-

பிரபல நடிகரான வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெகதீஸ்வரன் மலைக்கோயில் தீபம், காதல் அழிவதில்லை படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை விரகணூரில் அவரது வீட்டில் உயிரிழந்தார். வடிவேலு அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றுள்ளார். மேலும் வடிவேலுவின் தம்பி மறைவிற்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ