spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் அவரை தான் தெய்வமாக வணங்குகிறேன்...... 'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு!

நான் அவரை தான் தெய்வமாக வணங்குகிறேன்…… ‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு!

-

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பி வாசு தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து கங்கனா ரனாவத், வடிவேலு, மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் எம் எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகி உள்ளிட்டோரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், வடிவேலு படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதில், வடிவேலு, “சில நாட்களுக்கு முன்னால் என்னை நடிக்க வரவிடாமல் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்று விட்டார்கள். சினிமாவில் நடிக்க உனக்கு தகுதி இல்லை என்று கூறி விட்டார்கள். அந்தக் கதவை உடைத்து புது சாவியை கொடுத்து எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கி வைத்தவர் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தான். அவரை என் குல தெய்வங்களுக்குப் பிறகு தெய்வமாக வணங்குகிறேன். சந்திரமுகி 2 படத்திலும் முதல் பாகத்தில் நடித்ததை போல முருகேசனாக தான் நடித்துள்ளேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ