நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமான லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த படத்தில் பிக் பாஸ் ஜனனி, கைதி படத்தில் நடித்திருந்த நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், மற்றும் விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில், வசந்தி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
மேலும் இவர்களுடன் மடோனா செபாஸ்டியன், அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இணைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் வையாபுரியும் லியோ படத்தில் இணைந்திருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் வையாபுரி, ஏற்கனவே விஜயுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், போக்கிரி, திருப்பாச்சி, காவலன், சச்சின், வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.