spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' .... ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ …. ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் மிஸ்ஸஸ் & மிஸ்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' .... ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தினார். மேலும் நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர், தனது மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்ஸஸ் & மிஸ்டர் எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படமானது ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' .... ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே படத்தில் இருந்து டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. இந்நிலையில் வருகின்ற மே 25ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் அதே நாளில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ