குட் பேட் அக்லி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63வது படமாக குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா,அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதை தொடர்ந்து வெளியான ‘OG சம்பவம்’ பாடலும் இணையத்தை கலக்கி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரைலரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் டீசரிலேயே அஜித்தின் விண்டேஜ் படங்களின் குறியீடுகளை காட்டி ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருந்தார். அடுத்தது ட்ரெய்லரிலும் அவர் எந்த மாதிரியான சம்பவம் செய்யப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், இந்த உலகம் நம்மை நல்லவராக பார்த்தால் நல்லவராக இருப்போம். கெட்டவராக பார்த்தால் கெட்டவராக அக்லியாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதுதான் குட் பேட் அக்லி படத்தின் மையக்கரு என கூறி இருந்தார்.
மேலும் இப்படமானது அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எமோஷனல் கலந்த படமாக உருவாகி இருக்கிறது என அப்டேட் கொடுத்திருந்தார். எனவே இந்த படத்தில் அஜித்துக்கு மகனாக நடிகர் கார்த்திகேயா தேவ் நடித்துள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் அஜித்தின் மகன் கதாபாத்திரம், வரலாறு படத்தில் இடம்பெற்ற அஜித் கதாபாத்திரத்தில் இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.