spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பாராத திருப்பங்கள்.... கொலையாளி யார்?... வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்' பட ட்ரைலர் வெளியீடு!

எதிர்பாராத திருப்பங்கள்…. கொலையாளி யார்?… வரலட்சுமி சரத்குமாரின் ‘தி வெர்டிக்ட்’ பட ட்ரைலர் வெளியீடு!

-

- Advertisement -

வரலட்சுமி சரத்குமாரின் தி வெர்டிக்ட் பட டிரைலர் வெளியாகி உள்ளது.எதிர்பாராத திருப்பங்கள்.... கொலையாளி யார்?... வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்' பட ட்ரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். தற்போதைய இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தி வெர்டிக்ட் எனும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். கிரைம் இன்வேஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிருஷ்ணா சங்கர் இயக்கியிருக்கிறார். இதில் வரலட்சுமி சரத்குமார் தவிர, சுகாசினி, ஸ்ருதி ஹரிஹரன், வித்யூலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஆதித்யா ராவ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 30ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில், சுகாசினி கொலை செய்யப்படுகிறார். அதற்கு காரணம் யார்? என்பதை விசாரிக்கும் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். டிரைலரில் சில திருப்பங்கள் காட்டப்படுகிறது. எனவே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்திலும் வைரலாகி வருகிறது.

MUST READ