spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுராணக் கதையை அடிப்படையாக கொண்ட அஸ்வின்ஸ்... வசந்த் ரவியின் புதிய படம்!

புராணக் கதையை அடிப்படையாக கொண்ட அஸ்வின்ஸ்… வசந்த் ரவியின் புதிய படம்!

-

- Advertisement -

வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஸ்வின்ஸ்‘ என்ற படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். இன்று வசந்த் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring


ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குதிரை வீரர்களான அஸ்வினி குமாரர்களான இரட்டைக் கடவுள்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜீவ் மேனனின் மகள் சரஸ் மேனன் இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார். விமலா ராமன், முரளிதரன், உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

முழு படமும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. வசந்த் ரவி ஒரு யூடியூபராக இந்தப் படத்தில் நடித்துள்ளார். 1,500 ஆண்டுகள் பழமையான சாபத்திற்கு பலியாகும் யூடியூபர்களின் குழுவைச் சுற்றி நடக்கும் சதி, இருள் உலகில் இருந்து மனித உலகில் தீமையை கட்டவிழ்த்துவிடும் பயங்கரம் இவை தான் படத்தின் கதைக்களம்.

MUST READ