spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிமல், கருணாஸ் கூட்டணியின் 'போகுமிடம் வெகுதூரமில்லை'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!

விமல், கருணாஸ் கூட்டணியின் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’…. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

விமல், கருணாஸ் கூட்டணியின் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விமல், கருணாஸ் கூட்டணியின் 'போகுமிடம் வெகுதூரமில்லை'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!நடிகர் விமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில் இவரது நடிப்பில் வெளியான பசங்க, களவாணி, கலகலப்பு போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் சார் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் நடிகர் விமல் , போகுமிடம் வெகுதூரமில்லை எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து தீபா சங்கர், ஆடுகளம் நரேன், மேரி ரிக்கெட்ஸ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா இந்த படத்தை இயக்க ஹார்ஸ் 9 பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்க டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். விமல், கருணாஸ் கூட்டணியின் 'போகுமிடம் வெகுதூரமில்லை'.... ரிலீஸ் குறித்த அப்டேட்!இந்த படமானது விமலின் முந்தைய படங்களைப் போல் அல்லாமல் மிகவும் சீரியஸான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தி ஓட்டுநராக விமல் நடித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படம் 2024 ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ