Homeசெய்திகள்சினிமாவிமல் நடிக்கும் 'தேசிங்கு ராஜா 2'.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.விமல் நடிக்கும் 'தேசிங்கு ராஜா 2'.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

கடந்த 2013ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் தேசிங்குராஜா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விமலுடன் இணைந்து பிந்து மாதவி, சூரி, ரவி மரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து விமல் – எழில் கூட்டணியில் தேசிங்கு ராஜா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வித்தியாசாகர் இதற்கு இசையமைக்கிறார். செல்வா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விமலுடன் இணைந்து பூஜிதா, ஹர்ஷிதா, விஜய் டிவி புகழ், ரவி மரியா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் காமெடி கலந்த கதையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.விமல் நடிக்கும் 'தேசிங்கு ராஜா 2'.... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! இந்நிலையில் இந்த படமானது 2025 ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த படமும் முதல் பாகத்தை போல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ