Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

‘கோட்’ படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

-

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு, சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.'கோட்' படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு! தற்போது இவர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் உருவாகி வருகிறது. படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கோட்' படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் முன்னோட்ட வீடியோவும் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அடுத்ததாக இதன் மூன்றாவது பாடல் வெளியாக இருக்கிறது.

இது தொடர்பான அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனவே விரைவில் மூன்றாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலானது விஜய் மீனாட்சி சௌத்ரி ஆகிய இருவருக்கமான குத்து பாடல் என்று சொல்லப்படுகிறது.

MUST READ