இயக்குனர் வெற்றிமாறன், நெல்சன் குறித்து பேசி உள்ளார்.
வெற்றிமாறனின் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். இந்த படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும், ஆர்.டி. ராஜசேகர் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். டார்க் காமெடி அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் வெற்றிமாறன் இப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், ” விடுதலை பாகம் 1 முடித்த பிறகு ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பினார். இதை அவர் தயாரிக்கப் போவதாக சொன்னார். அவர் தயாரிக்கிற அளவுக்கு அந்த ஸ்க்ரிப்ட்டில் என்ன இருக்கிறது? என்று பார்த்தால் அதில் 5 விதமான எதிர்பாராத மற்றும் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் இருந்தது. இந்த படத்தில் நெல்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் படக்குழுக்கு சில பரிந்துரைகளையும் வழங்கினார். நான் சமீபத்தில் சினிமாவில் பார்த்த ஒரு நல்ல மனிதர் நெல்சன். இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரம் பேசுவோம். ‘மாஸ்க்’ படம் எங்களுக்கு நிறைய பேசுவதற்கான வாய்ப்பை கொடுத்தது. கவின் நெல்சனின் உதவியாளர், தம்பி எல்லாமே. நெல்சனின் பங்கு இந்த ஸ்கிரிப்ட்டுக்குள் நிறைய இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


